Tuesday 8 May 2012

செல்போன் சிறைக்குள் . . .

சமீபத்தில் சென்னையில் இருந்து திரும்பி
விருதுநகருக்குப் பயணப்பட்டேன்.
எனது அருகில்-
ஒரு தந்தையும் (50 வயதிருக்கலாம்) 
அவரது மகளும்(20 வயதிருக்கலாம்) பயணித்தனர்.
உணவு முடித்து நான், அவர்கள் மற்றும் அனைவரும்
துயில ஆயத்தமானோம்.
சற்று நேர நிசப்தத்தின் பின்,
செல்போனில் துவங்கின, முனகலான பேச்சுக்கள்.
மகள் தந்தையிடம் ஏதோ கேட்க,
செல் தொடர்பில் ஏற்பட்ட இடையூறு தாங்காமல்,  
தந்தை கோபத்துடன் “Don't disturb, I'm busy" என்றார்.
பாவம், மகள் மிரண்டு போய் அமைதியானாள்.
தந்தை எப்போது செல் பேச்சை முடிப்பார்,
பிறகு, தான் பேசலாம் என்று அவ்வப்போது
தந்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அவர் முடித்த பாடில்லை.
அலுத்துப்போய், மகளும் செல் பெச்சைத் துவங்கினாள்.
பேச்சு களை கட்ட ஆரம்பித்து அப்பாவை மறந்தாள்.
சற்று நேரம் கழித்து
தந்தை மகளிடம், “என்னம்மா? கூப்பிட்டாயே!” என்றார்.
பதிலில்லை.
மூன்று நான்கு முறை கேட்ட பின்,
மகள் இப்போது சொன்னாள், “Dad, don't disturb, I'm busy".

நானும் எழுதுகிறேன் !

எழுத வேண்டும்
என்ற நீண்ட கால ஆசையே
இந்த வலைப் பூ பிரசவிக்க காரணம்.
ம்.. இதெல்லாம் ஒரு எழுத்து,
இதையும் நாம் வாசிக்க வேண்டுமா?
என்று ஒதுங்காமல் வாசிக்க வேண்டுகிறேன்.